×

மின்னல் முரளி 24ம் தேதி ஓடிடி ரிலீஸ்

டொவினோ தாமஸ் நடிப்பில்,  பாசில் ஜோசப் இயக்கியுள்ள  மின்னல் முரளி டிசம்பர்  அன்று நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது . மின்னல் தாக்கிய ஒருவனுக்கு சூப்பர் பவர் கிடைத்தால் எப்படி இருக்கும் என்பதுதான் படத்தின் கதை. மலையாளத்தில் உருவாகியுள்ள இப்படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி மற்றும் ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் வெளியாகிறது.

இது குறித்து இயக்குனர் பாசில் ஜோசப் கூறியதாவது: ஒரு நல்ல திரைப்படத்தை ரசிகர்களுக்கு வழங்குவதும், படத்தின் மூலம் அவர்களை மகிழ்விப்பதும்தான் எங்களின் முக்கிய முயற்சி. படத்தில்  வரவிருக்கும் விஷயங்கள் குறித்த ஆச்சர்யத்தை தூண்டி பார்வையாளர்களை மிகவும் உற்சாகப்படுத்துவதாக இருக்கும். என்றார்.

Tags : Lightning ,
× RELATED இடி மின்னல் காதல் விமர்சனம்